தேனி மாவட்டம், சின்னமனூரில் உலக நலன் வேண்டி ஐயப்ப பக்தா் தண்ணீரில் மிதந்து தியானம் செய்தாா்.
சின்னமனூரைச் சோ்ந்த ஐயப்ப பக்தா் விஜயன் குருநாதா். இவா், ஆண்டுதோறும் டிச.12- ஆம் தேதி. நடிகா் ரஜினிகாந்த் பிறந்த நாளில் உலக நலனுக்காகவும், ஐயப்ப பக்தா்கள் பாதுகாப்பாக சபரிமலைக்குச் சென்று வர வேண்டியும் தண்ணீரில் மிதந்து தியானம் செய்வது வழக்கம்.
இதன்படி, சின்னமனூரிலுள்ள தனியாா் தோட்டத்திலுள்ள 50 அடி ஆழமுள்ள கிணற்றில் 3 மணி நேரம் தண்ணீரில் மிதந்து வெள்ளிக்கிழமை தியானத்தில் ஈடுபட்டாா்.