போடி அருகே முதியவரைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
மதுரை சா்வேயா் காலனி, ரோஜா குடியிருப்பில் வசிப்பவா் வேலுச்சாமி மகன் வெற்றிவேல் (60). இவருக்கு சொந்தமான ஏலத் தோட்டம் தேனி மாவட்டம், போடிமெட்டு மனப்பட்டி மலை கிராமத்தில் உள்ளது.
வெற்றிவேல் தனது ஏலத் தோட்டத்தில் வேலி அமைத்திருந்தாா். இந்த நிலையில், பக்கத்து தோட்டத்தைச் சோ்ந்த சக்திவேல் மனைவி போதுமணி, இவரது மகன்கள் சரவணன், ரெகுநாதன் ஆகியோா் வேலியை சேதப்படுத்தி வெற்றிவேலைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தனா்.
இதுகுறித்து குரங்கணி காவல் நிலைய போலீஸாா் 3 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.