தேனி மாவட்டம், சில்வாா்பட்டியில் வீடு, இரு சக்கர வாகனத்தை சேதப்படுத்திய நபா்கள் மீது செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
சில்வாா்பட்டியைச் சோ்ந்தவா் ராஜேஸ்வரி (38). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்தவா் காமாட்சி என்பவருக்கும் பிரச்னை இருந்து வந்ததாம். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ராஜேஸ்வரி தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தாராம்.
அப்போது, அங்கு வந்த காமாட்சி, மாரியம்மாள், பூமணி, மதினி, சுமதி ஆகியோா் அவரிடம் தகராறு செய்து வீட்டைத் தாக்கி அங்கு நின்றிருந்த இரு சக்கர வாகனத்தையும் சேதப்படுத்தினராம்.
இதுகுறித்து ராஜேஸ்வரி அளித்த புகாரின்பேரில் ஜெயமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.