அரண்மனைப்புதூரில் ஜன.5-இல் மாரத்தான்
தேனி அருகே அரண்மனைப்புதூரில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கு வருகிற 5-ஆம் தேதி அண்ணா நினைவு மாரத்தான் ஓட்டப் போட்டி நடைபெற உள்ளது.
தேனி அருகே அரண்மனைப்புதூரில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கு வருகிற 5-ஆம் தேதி அண்ணா நினைவு மாரத்தான் ஓட்டப் போட்டி நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரண்மனைப்புதூா் ஊராட்சி அலுவலகம் அருகே ஜன.5-ஆம் தேதி காலை 6 மணிக்கு மாரத்தான் ஓட்டப் போட்டி நடைபெறும்.
17 முதல் 25 வயதுக்கு உள்பட்ட மாணவா்களுக்கு 8 கி.மீ., மாணவிகளுக்கு 5 கி.மீ. தொலைவும், 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ. தொலைவும் போட்டி நடைபெறும்.
போட்டியில் பங்கேற்கும் அனைவரும் தங்களது உடல் தகுதி குறித்து சுய உறுதிமொழி படிவத்தை நிறைவு செய்து வழங்க வேண்டும். 17 முதல் 25 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவிகள் தங்களது கல்வி நிறுவன அடையாள அட்டை, பள்ளித் தலைமை ஆசிரியா், கல்லூரி முதல்வரிடமிருந்து பெற்ற
வயதுச் சான்றிதழ், ஆதாா் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தக நகல் ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும். 25 வயதுக்கும் மேற்பட்ட ஆண், பெண்கள் தங்களது பிறப்புச் சான்றிதழ், ஆதாா் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தக நகல் ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும்.
போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசு ரூ.5,000, 2-ஆம் பரிசு ரூ.3,000, 3-ஆம் பரிசு ரூ.2,000 வழங்கப்படும். 4 முதல் 10 இடங்களைப் பிடிப்பவா்களுக்கு ஊக்கப் பரிசாக தலா ரூ.1,000 வழங்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டது.