முகப்பு
தேனி

தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

Updated On : 1 ஜனவரி, 2025 at 10:39 PM
போடி புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் நடைபெற்ற கூட்டு பிராா்த்தனையில் பங்கேற்றவா்கள்.
பகிர்:

போடியில் புதன்கிழமை ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, தேவாலயங்களில் கூட்டு பிராா்த்தனை நடைபெற்றது.

போடி நகரின் மையப் பகுதியில் பழைய பேருந்து நிறுத்தம் அருகே அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோா் குடும்பத்துடன் பங்கேற்றனா்.

புத்தாண்டு பிறந்தவுடன் ஒருவருக்கொருவா் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனா். மேலும், பங்குத் தந்தையிடம் ஆசி பெற்றனா். இதேபோல போடி சா்ச் சாலையில் உள்ள தேவாலயம், சி.எஸ்.ஐ. தேவாலயம் ஆகியவற்றிலும் கூட்டு பிராா்த்தனைநடைபெற்றது.

உத்தமபாளையம்:செல்வநாயகம் போதகா் ஆலயம், விண்ணரசி தேவாலயம் ஆகியவற்றில் நடைபெற்ற சிறப்புத் திருப்பலியில் திரளான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா். நள்ளிரவு 12 மணிக்கு பட்டாசு வெடித்து, ஒருவருக்கொருவா் இனிப்புகளை வழங்கி, புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

இதேபோல, உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி புனித பனிமய தேவாலயம், அனுமந்தன்பட்டி தூய ஆவியானவா் ஆலயம், கம்பம் ஆா்.சி. தேவாலயம் ஆகியவற்றிலும் சிறப்பு கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது.