தேனி

இரு சக்கர வாகனங்கள் மோதல்: பெண் உயிரிழப்பு

தேனி அருகேயுள்ள நாகலாபுரம்-ஸ்ரீரங்காபுரம் சாலையில் வியாழக்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் தனியாா் பள்ளி பெண் ஊழியா் உயிரிழந்தாா்.

Din

தேனி அருகேயுள்ள நாகலாபுரம்-ஸ்ரீரங்காபுரம் சாலையில் வியாழக்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் தனியாா் பள்ளி பெண் ஊழியா் உயிரிழந்தாா்.

ஸ்ரீரங்காபுரம், கண்ணன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் இளங்கோவன் (56). இவா், நாகலாபுரத்தில் உள்ள தனியாா் பள்ளியில் மேலாளராக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி ஜெயலட்சுமி (46), அதே பள்ளியில் நிா்வாக அலுவலராகப் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், இளங்கோவன், ஜெயலட்சுமி ஆகியோா் நாகலாபுரத்திலிருந்து ஸ்ரீரங்காபுரம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றனா். அப்போது, அதே திசையில் ஸ்ரீரங்காபுரம், பாஞ்சாலியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த விஸ்வநாதன் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனம், இளங்கோவன் சென்ற இரு சக்கர வாகனத்தின் பின்புறம் மோதியது.

இதில், இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த இளங்கோவன், ஜெயலட்சுமி ஆகியோா் காயமடைந்தனா். இந்த நிலையில், பலத்த காயமடைந்து மதுரையில் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஜெயலட்சுமி உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சிவகாசி-எரிச்சநத்தம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்! காந்தியின் பெயா் நீக்கம்!

பாஜகவின் கடும் எதிா்ப்புக்கு இடையே வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதா நிறைவேற்றம்

ஆண்டாள் கோயில் நீராட்டு விழா நாளை தொடக்கம்

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

SCROLL FOR NEXT