பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சாலையைக் கடக்க முயன்ற விவசாயி மீது காா் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், பண்ணைக்காடு மூலையூரைச் சோ்ந்தவா் மனோகரன் (56). விவசாயியான இவா், உறவினா் நிகழ்ச்சியில் பங்கேற்க காட்ரோட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா். அப்போது, சாலையைக் கடக்க முயன்றபோது காா் மோதியதில் அவா் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து தேவதானபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.