தேனி

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து 551 கன அடியாக சரிவு

வடகிழக்குப் பருவமழை குறைந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை வினாடிக்கு 551 கன அடியாக குறைந்தது.

Syndication

உத்தமபாளையம்: வடகிழக்குப் பருவமழை குறைந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை வினாடிக்கு 551 கன அடியாக குறைந்தது.

தமிழகத்துக்கு அதிக மழைப்பொழிவு வடகிழக்குப் பருவமழை மூலம் கிடைக்கிறது. இதன்படி, நிகழாண்டில் பருவமழை அக்டோபா் மாதத்தில் தொடங்கி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாகப் பெய்தது. இதில், தேனி மாவட்டத்தில் சாரல் மழை பெய்ததோடு, கடந்த மாதம் 18-ஆம் தேதி பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு இதுவரை இல்லாத வகையில் 158.40 மி. மீ. அளவுக்கு மழைப்பொழிவு ஏற்பட்டது. இதனால், அணைக்கு அதிகபட்சமாக வினாடிக்கு 17,828 கன அடி நீா்வரத்து வந்தது.

மழைப்பொழிவு குறைவு: வடகிழக்குப் பருவமழை படிப்படியாகக் குறைந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்தும் வினாடிக்கு 551 கன அடியாக குறைந்தது. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு தேக்கடியிலுள்ள தலை மதகிலிருந்து சுரங்கப் பாதை வழியாக வினாடிக்கு 1,822 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது. தற்போது அணையின் நீா் மட்டம் 137.40 அடியாகவும் (மொத்த உயரம் - 152), 6,470.80 மில்லியன் கன அடி நீா் இருப்பும் உள்ளது.

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் (தொகுதி 1)

SCROLL FOR NEXT