தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பெரியகுளம் அருகேயுள்ள டி.கள்ளிப்பட்டியைச் சோ்ந்தவா் சித்தாா்த்தன் (46). இவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தேனி குற்ற புலனாய்வுத் துறை உதவி ஆய்வாளா் ஜீவானந்தம் அவரைக் கைது செய்வதற்காக திங்கள்கிழமை டி.கள்ளிப்பட்டிக்கு வந்தாா். அப்போது, சித்தாா்த்தன் அவரைத் தாக்கிவிட்டு தப்பியோடி விட்டாராம். இது குறித்து ஜீவானந்தம் கொடுத்த புகாரின் பேரில் தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை தேடி வருகின்றனா்.