தேனி

வாக்காளா் கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

Syndication

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சூலப்புரம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடா்பாக வாக்காளா்களுக்கு கணக்கீட்டு படிவம் வழங்குவதை மாவட்ட ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தேனி மாவட்டத்தில் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட பகுதிகளில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ள 1,394 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தோ்தல் ஆணையம் அறிவித்தபடி, இந்த அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை வீடுதோறும் சென்று கணக்கெடுப்புப் படிவங்களை விநியோகம் செய்யத் தொடங்கினா். இந்தப் படிவங்கள் வழங்கும் பணியை தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

போடி சிலமலை அருகேயுள்ள சூலப்புரம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியா் நேரில் பாா்வையிட்டாா். அப்போது அவா் படிவங்களை அனைத்து வாக்காளா்களுக்கும் வழங்கி, திரும்பப் பெற வேண்டும் என அறிவுறுத்தினாா். போடி வட்டாட்சியா் சந்திரசேகரன், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் உடனிருந்தனா்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT