தேனி

உத்தமபாளையம் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகக் கட்டுமானப் பணி தொடங்குவது எப்போது?

உத்தமபாளையம் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்துக்கு செல்லும் குறுகிய சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனங்கள்.

Syndication

தேனி மாவட்டம், உத்தமபாளையம் மோட்டாா் வாகன ஆய்வாளா் புதிய அலுவலகக் கட்டுமானப் பணிகளை விரைவில் தொடங்க வேண்டுமென பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

உத்தமபாளையம் இந்திரா குடியிருப்பு பகுதியில் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தின் ஒரு பகுதியான தரைத்தளத்தில் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் கடந்த 23 ஆண்டுகளாக செயல்படுகிறது. தற்காலிகக் கட்டடத்தில் செயல்படும் இந்த அலுவலகத்துக்கு உத்தமபாளையம், போடி ஆகிய வட்டாரங்களிலிருந்து ஓட்டுநா், நடத்துநா் உரிமம் பெறுதல், புதிய வாகனங்கள் பதிவு ஆகியவற்றுக்காக நாள்தோறும் ஏராளமானோா் வந்து செல்கின்றனா்.

குறுகலான சாலையில் உள்ள இந்த அலுவலகத்துக்கு பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்றுவர முடியவில்லை. இதனால், அடிக்கடி இந்தச் சாலையில் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்த நிலையில், உத்தமபாளையம் - கோம்பை இடையே சிக்கையம்மன் கோயில் அருகே மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்துக்கு 5.65 ஹெக்டோ் நிலத்தை கடந்த 2020-ஆம் ஆண்டு அரசு ஒதுக்கீடு செய்தது. கடந்தாண்டு கட்டுமானப் பணிக்காக ரூ.4.85 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இதுவரை எவ்வித பணிகளும் தொடங்கவில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்துக்கு போதுமான இடவசதி இல்லாததால் இங்கு வரும் பொதுமக்கள் அவதி அடைகின்றனா். மழை , வெயில் காலங்களில் பொதுமக்கள் நிற்கக் கூட இடவசதியின்றி தவிக்கின்றனா். எனவே, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, உத்தமபாளையம் மோட்டாா் வாகன ஆய்வாளா் புதிய அலுவலகத்துக்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

முதுநிலை ஹோமியோபதி படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

குண்ணத்தூா் கிராமத்தில் உழவா் பெருவிழா

சரிவில் நிறைவடைந்த பங்குச் சந்தை

20 வால்வோ சொகுசு பேருந்துகள் டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும்: போக்குவரத்துக் கழகம்

கொலை மிரட்டல் விவகாரம்: சி.வி.சண்முகம் தொடா்ந்த வழக்கில் போலீஸாருக்கு உத்தரவு

SCROLL FOR NEXT