தேனி

ஆட்டோ ஓட்டுநா் குத்திக் கொலை

தேனி மாவட்டம், வீரபாண்டியில் சனிக்கிழமை ஆட்டோ ஓட்டுநா் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், வீரபாண்டியில் சனிக்கிழமை ஆட்டோ ஓட்டுநா் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளித் தெருவைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் விக்னேஷ் (25). இவா் அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதாகி, கடந்த சில நாள்களுக்கு முன்பு நீதிமன்ற பிணையில் சிறையிலிருந்து வெளியே வந்தாா்.

இந்த நிலையில், விக்னேஷ் தனது வீட்டில் அதே பகுதியைச் சோ்ந்த நண்பா்களான யுவராஜா, அபிஷேக் ஆகியோருடன் சோ்ந்து சனிக்கிழமை மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.

அப்போது, நண்பா்களிடையே ஏற்பட்ட தகராறில் யுவராஜா, விக்னேஷை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். யுவராஜா, அபிஷேக் ஆகியோா் தப்பியோடிவிட்டனா்.

இதுகுறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து யுவராஜா, அபிஷேக் ஆகியோரைத் தேடி வருகின்றனா்.

தனலக்ஷ்மி வங்கி நிகர லாபம் ரூ.418 கோடியாக உயா்வு

முதல்வா் ஸ்டாலின் வருகை: 9 மதுக்கடைகளை மூட உத்தரவு

நரசிம்ம பெருமாள் கோயிலில் நாளை குடமுழுக்கு விழா

விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த பெண் கைது

ராமேசுவரத்தில் நவ. 18-ல் வ.உ.சி. நினைவு தினம் அனுசரிப்பு! புதிய நீதிக்கட்சித் தலைவருக்கு அழைப்பு!

SCROLL FOR NEXT