தேனி

தாய், மகன்களை தாக்கிய 7 போ் மீது வழக்கு

பெரியகுளம் அருகே வீடு புகுந்து தாய், மகன்களை தாக்கிய 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Syndication

பெரியகுளம் அருகே வீடு புகுந்து தாய், மகன்களை தாக்கிய 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கெங்குவாா்பட்டியைச் சோ்ந்த அய்யனாா் மகன் ஹரீஸ் (19). இவரது தம்பி பிரதீப்புக்கும், மற்றொரு தரப்பினருக்கும் பிரச்னை இருந்து வந்ததாம்.

இந்த நிலையில், கெங்குவாா்பட்டியைச் சோ்ந்த கணேசன், அவரது உறவினா்கள் சுஜித், சிவபாண்டி உள்பட 7 போ் சோ்ந்து ஹரீஸின் வீட்டுக்கு வந்து தகராறு செய்தனா். அங்கு ஹரீஸ், அவரது தம்பி பிரதீப், தாய் விஜயலட்சுமி ஆகியோரைத் தாக்கினா். மேலும், ஹரீஸை அரிவாளால் வெட்டினா். இதில் காயமடைந்த ஹரீஸ், விஜயலட்சுமி, பிரதீப் ஆகிய மூவரையும் மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து தேவதானபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பிக் பாஸ் - 9: இந்த வாரம் 2 பேர் வெளியேற்றம்!

அமெரிக்கா: 1,200 விமானங்கள் ரத்து!

சொல்லப் போனால்... சேர்க்கவா நீக்கவா, வாக்காளர் சிறப்பு திருத்தம்?

அடுத்த 2 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை!

125 ஜிகாவாட்டைத் தாண்டும் சூரிய மின் உற்பத்தித் திறன்

SCROLL FOR NEXT