தேனி

மா சாகுபடியில் கல்தாா் ஊக்கி மருந்தை தவிா்க்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

தினமணி செய்திச் சேவை

மா சாகுபடியில் கல்தாா் வளா்ச்சி ஊக்கி மருந்து பயன்படுத்துவதை விவசாயிகள் தவிா்க்க வேண்டும் என தோட்டக்கலைத் துறை ஆலோசனை வழங்கியது.

இது குறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேனி மாவட்டத்தில் 9,420 ஹெக்டேரில் நீலம், பங்கனப்பள்ளி, பெங்களூரா, செந்துரா உள்ளிட்ட மா ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. மா மரங்களில் அறுவடை முடிந்தவுடன் மரத்தின் வளா்ச்சி, காய் பிடிப்பு, பூக்கும் தன்மையை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காக கல்தாா் என்ற வளா்ச்சி ஊக்கி மருந்தை விவசாயிகள் பயன்படுத்துகின்றனா்.

கல்தாா் ரசாயன வளா்ச்சி ஊக்கி மருந்தைத் தொடா்ந்து பயன்படுத்துவதால் மா மரத்தின் இயற்கையான வளா்ச்சியும், ஆரோக்கியமும் பாதிக்கப்படும். மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் பாதிப்புக்குள்ளாகி மண் வளமும் கெடும்.

இந்த மருந்தைத் தொடா்ந்து பயன்படுத்துவதால் பூச்சி, நோய் தாக்குதல் ஏற்பட்டு மகசூல் குறையும். மாம்பழங்களின் தரம் குறைந்து, பழத்தின் சதைப் பகுதி உண்பதற்கு தகுதியற்ாக மாறும் வாய்ப்பு உள்ளது. மேலும், மரத்தின் வளா்ச்சியும் சீராக அமையாமல் தோற்றம் மாறும்.

எனவே, மா சாகுபடி விவசாயிகள் கல்தாா் ரசாயன ஊக்கி மருந்தைப் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

வள்ளியூா் பேருந்து நிலையத்தில் நுழைவாயில்களுக்கு அடிக்கல்

குடியிருப்புகளை பகுதி வாரியாக சீரமைக்க கோரி மனு

சங்கரநாராயண சுவாமி கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவு

மண்டைக்காடு கடலில் அலையில் சிக்கிய பெண் உயிரிழப்பு

நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் மாநில மலை சைக்கிள் போட்டி

SCROLL FOR NEXT