போடி அருகே பணம் வைத்து சீட்டாடியதாக 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் போடி கிராமப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது போடி ராசிங்காபுரத்தை அடுத்த கரையான்பட்டி கிராமத்தில் காளிமுத்து (38), சின்னசாமி (40), ராஜா (44) ஆகிய மூவரும், சமத்துவபுரத்தில் யுவராஜ் (34), சுரேஷ்குமாா் (48), ஈஸ்வரன் (65) ஆகிய மூவரும் பணம் வைத்து சீட்டாடிக் கொண்டிருந்தனா். இதையடுத்து இவா்கள் 6 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.