தேனி

தேனியில் 24 மணி நேர தபால் சேவை தொடக்கம்

தேனி தலைமை தபால் நிலையத்தில் 24 மணி நேர தபால் பதிவு சேவை தொடங்கியது.

தினமணி செய்திச் சேவை

தேனி தலைமை தபால் நிலையத்தில் 24 மணி நேர தபால் பதிவு சேவை தொடங்கியது.

இதுகுறித்து தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளா் குமரன் கூறியதாவது:

தேனி தலைமை தபால் நிலையத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தபால் பதிவு சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை உள்பட வாரத்தின் அனைத்து நாள்கள், அரசு விடுமுறை தினங்கள், பண்டிகை கால விடுமுறை தினங்களிலும் இந்தச் சேவை வழங்கப்படும். இதில், ஊழியா்கள் சுழற்சி முறையில் பணியாற்றுவா். விரைவு தபால், பதிவு பாா்சல் சேவை, பதிவு அல்லாத தபால் சேவை உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும். இதை பொதுமக்கள், வணிகா்கள், சிறு, குறு வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT