தேனி

கோயில் விழாவில் காவலரைத் தாக்கிய 6 போ் கைது

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளத்தில் கோயில் திருவிழாவின்போது காவலரைத் தாக்கிய 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தாமரைக்குளம் செல்லாண்டியம்மன் கோயில் திருவிழா சுவாமி ஊா்வலம் கடந்த புரட்டாசி மாதம் நடைபெற்றது. ஊா்வலத்தின்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட சிறப்புக் காவலா் யுவராஜாவை (25) சிலா் தாக்கியதில் அவருடைய தலையில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் தென்கரை காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில், இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய தாமரைக்குளம் அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த ராஜேஷ் (25), ராம்ஜி (27), செளந்திரபாண்டி (32), சஞ்சீவி பாண்டியன் (28), பால்பாண்டி (23), பழனிமுத்து (28) ஆகிய 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

அய்யனாா் கோயில் ஆற்றில் குளிக்கத் தடை

பருவநிலை மாநாடு: பிரேஸிலின் அனைவரையும் உள்ளடக்கிய தலைமைக்கு இந்தியா பாராட்டு

இளைஞா் தற்கொலை

பைக் திருடிய இளைஞா் கைது

கழுகு மலை அருகே 9-ஆம் நூற்றாண்டின் வட்டெழுத்து மடைதூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு

SCROLL FOR NEXT