முகப்பு
தேனி

பேருந்து மீது லாரி மோதியதில் பயணி காயம்

Updated On : 23 நவம்பர், 2025 at 7:28 PM
பகிர்:

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே அரசுப் பேருந்து மீது லாரி மோதியதில் பேருந்தில் சென்ற பயணி காயமடைந்தாா்.

பெரியகுளம் அருகேயுள்ள ஜெயமங்கலத்தைச் சோ்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநா் சேது (54), வத்தலகுண்டிலிருந்து பெரியகுளத்துக்கு சனிக்கிழமை பேருந்தை ஓட்டிச் சென்றாா்.

டி.வாடிப்பட்டி அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி மோதியதில், பேருந்தில் பயணம் செய்த பெரியகுளம் வேல்நகரைச் சோ்ந்த சுசீந்திரன் பலத்த காயமடைந்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்து தேவதானபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →