சுருளி அருவி DPS
தேனி

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: குளிக்கத் தடை!

சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் அருகேவுள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி, அருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னம் காரணமாக தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஸ்ரீ வில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் சரணாலயம் பகுதிக்குட்பட்ட மேகமலை வனப்பகுதியிலும் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது.

இதன்காரணமாக மேகமலை அடிவாரத்தில் உள்ள சுருளி அருவியில் திங்கள்கிழமை அதிகாலை முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கம்பம் கிழக்கு வனத்துறையினர் பாதுகாப்பு கருதி சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்துள்ளனர்.

இதுகுறித்து வனத் துறையினர் தெரிவித்ததாவது:

“மேகமலை உள்ளிட்ட பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மழைப் பொழிவு குறைந்த பின், அருவியில் நீர்வரத்து சீரானதாக வனத்துறை அறிவிப்பு வெளியிடும் வரை சுற்றுலாப் பயணிகள் அருவிப் பகுதிக்கு செல்ல வேண்டாம்” எனத் தெரிவித்தனர்.

Flooding at Suruli Falls: Bathing prohibited

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுயமரியாதையை அடகுவைக்க மட்டும்தான் கூட்டணியா? - இபிஎஸ்ஸை விமர்சித்த மு.க. ஸ்டாலின்!

வேட்டுவம் படப்பிடிப்பு நிறைவு!

வானும் கடலும் நீல நிறம்... அமைரா தஸ்தூர்!

நெல் ஈரப்பதம்: திருவாரூரில் திமுக, கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

தென்காசி தனியார் பேருந்துகள் மோதல்! விபத்துக்கு என்ன காரணம்?

SCROLL FOR NEXT