உத்தமபாளையம்: தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் நீர்வரத்து சீரானதால் 3 நாள்களுக்குப் பின் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை அனுமதி அளித்தனர்.
தென்கிழக்கு வங்கக் கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த மாவட்டங்களை ஒட்டியுள்ள ஸ்ரீ வில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் சரணாலயம் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையிலும் இதன் தாக்கம் இருப்பதால் மேகமலை உள்ளிட்ட வனப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை ுதல் தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால் மேகமலை அடிவாரத்தில் உள்ள சுருளி அருவியில் திங்கள்கிழமை அதிகாலை முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து கம்பம் கிழக்கு வனத்துறையினர் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு கடந்த 3 நாள்களாக தடை விதித்தனர்.
இந்நிலையில் 4 ஆவது நாளில் அருவியில் நீர்வரத்து சீரானதை அடித்து சுற்றுலாப் பயணிகளை குளிக்க வனத்துறை அனுமதி அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.