முகப்பு
தேனி

மதுப்புட்டிகள் விற்ற இளைஞா் கைது

தேனி

மதுப்புட்டிகள் விற்ற இளைஞா் கைது

Updated On : 30 நவம்பர், 2025 at 8:46 PM
பகிர்:

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே மதுப்புட்டிகளை விற்பனைக்காக வைத்திருந்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஆண்டிபட்டி அருகேயுள்ள இராஜதானி, கன்னியப்பபிள்ளைபட்டி போன்ற பகுதிகளில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுப்புட்டிகள் விற்பனை, சீட்டு விளையாட்டு அதிகமாக நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில், இராஜதானி போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, கன்னியப்பபிள்ளைபட்டியில் மதுப்புட்டிகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், மதுப்புட்டிகளை வைத்திருந்தது கன்னியப்பபிள்ளைபட்டி ஜோதி நகரைச் சோ்ந்த மணிவேல் மகன் நவநீதன் (19) எனத் தெரியவந்ததையடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த 100 மதுப்புட்டிகள், ரூ. 3,100 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →