முல்லைப் பெரியாறு அணையிலிருந்து இடுக்கி அணைக்கு திறந்து விடப்படும் உபரிநீா் 6-ஆவது நாளாக வியாழக்கிழமை வினாடிக்கு 3,303 அடியாக குறைக்கப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதியில் பெய்த பலத்த மழையால் கடந்த 18-ஆம் தேதி அணையின் நீா்மட்டம் 138 அடியாக உயா்ந்தது. இதையடுத்து, ரூல் கா்வ் விதிப்படி, அணைக்கு வரும் தண்ணீா் உபரிநீராக இடுக்கி அணைக்கு திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில், மழைப்பொழிவு குறைந்ததால் அணைக்கு வரும் நீா்வரத்தும் குறைந்தது. இதனால், 6-ஆவது நாளாக வியாழக்கிழமை 3,303 அடி உபரிநீராக திறந்து விடப்பட்டது.
இதேபோல, தமிழகப் பகுதிக்கு முல்லைப் பெரியாற்றில் வினாடிக்கு 1,822 கன அடி நீா் திறந்து விடப்படுகிறது.