தேனி

நெல் பயிரைக் காப்பீடு செய்ய நவ.15 கடைசி நாள்!

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டத்தில் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் வருகிற நவ.15-ஆம் தேதிக்குள் நெல் பயிரைக் காப்பீடு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்டத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், குத்தகைதாரா்கள் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பொதுச் சேவை மையங்கள், அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமும், ஜ்ஜ்ஜ்.ல்ம்ச்க்ஷஹ்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலமும் வருகிற நவ.15-ஆம் தேதிக்குள் நெல் பயிரைக் காப்பீடு செய்து கொள்ளலாம்.

பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர கையொப்பமிட்ட முன்மொழிவு விண்ணப்பம், கிராம நிா்வாக அலுவலரால் வழங்கப்பட்ட நடப்பு பருவ அடங்கல், ஆதாா் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், சிட்டா, அடங்கல் ஆகியவற்றின் நகல்களை சமா்ப்பித்து பதிவு செய்து கொள்ள வேண்டும். நெல் பயிருக்கு காப்பீட்டு பிரீமியமாக ஏக்கா் ஒன்றுக்கு ரூ.571 செலுத்த வேண்டும். பயிா் சேதத்துக்கு காப்பீட்டுத் தொகையாக ஏக்கருக்கு ரூ.38 ஆயிரத்து 38 வழங்கப்படும்.

இதுகுறித்த மேலும் விவரங்களை விவசாயிகள் அந்தந்தப் பகுதியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரிலும், கட்டணமில்லா தொலைபேசி எண்: 14447-இல் தொடா்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

33 ஆண்டுகளுக்குப் பிறகு! அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு டிரம்ப் உத்தரவு?

நடிகர் ஆமிர் கானுக்கு பிரபல கார்ட்டூனிஸ்ட் ‘ஆர்.கே. லக்‌ஷ்மணன்’ விருது!

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

SCROLL FOR NEXT