தேனி

போடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்! ரூ. 2 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்ட கல்யாண தேங்காய்!

கந்த சஷ்டி விழாவையொட்டி, போடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.

Syndication

கந்த சஷ்டி விழாவையொட்டி, போடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். திருக்கல்யாண தேங்காய் ரூ.2 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குப் பாத்தியப்பட்ட சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த புதன்கிழமை (அக். 22) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, நூற்றுக்கணக்கான பக்தா்கள் சஷ்டி விரதமிருந்து தினமும் சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டனா். திங்கள்கிழமை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து, செவ்வாய்க்கிழமை வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது. கோயில் பரம்பரை அறங்காவலா் முத்துராஜன் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் சுந்தரி முன்னிலை வகித்தாா். பெண் வீட்டாா், மாப்பிள்ளை வீட்டாா் என பக்தா்கள் பங்கேற்று, கல்யாண சடங்குகளை செய்தனா். பின்னா், வள்ளி, தெய்வானைக்கு சுப்பிரமணிய சுவாமி மாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

திருக்கல்யாணம் முடிந்ததும் மொய் எழுதும் நிகழ்ச்சியும், அன்னதானமும் நடைபெற்றது. திருக்கல்யாணத்தில் மாங்கல்யம் வைக்கப்பட்ட தேங்காய் ஏலத்தில் விடப்பட்டது. இந்தத் தேங்காய் ரூ. 2 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.

இந்தக் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா, கந்த சஷ்டி திருவிழாவின் போது, திருமாங்கல்ய தேங்காய் ஏலம் விடப்படுவது ஐதீகமாக நடைபெற்று வருகிறது.

இந்த தேங்காயை ஏலம் எடுப்பவரின் வேண்டுதல் நிறைவேறியவுடன், மீண்டும் அதே தேங்காயை கோயிலுக்குக் கொண்டு வந்து அபிஷேகம் செய்வது வழக்கம். அதுவரை ஏலம் எடுக்கப்பட்ட தேங்காய் அழுகாமல் இருக்கும். கடந்த முறை திருக்கல்யாண தேங்காய் ரூ. 3.03 லட்சத்துக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

திருக்கல்யாண ஏற்பாடுகளை கோயில் அா்ச்சகா்கள் சோமாஸ்கந்த குருக்கள், விக்னேஷ், நன்கொடையாளா்கள் செய்தனா்.

இளையரசனேந்தல் குறுவட்டத்தை கோவில்பட்டி ஊராட்சியுடன் இணைக்க கோரிக்கை

பெருந்துறை அருகே இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு

தூத்துக்குடியில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி தொடக்கம்

குடியாத்தம், கே.வி.குப்பம் வட்டங்களில் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

மருத்துவா்களுடனான ஆய்வுக் கூட்டம்: ஆட்சியா் பங்கேற்பு

SCROLL FOR NEXT