தேனி

13 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உள்பட இருவா் கைது

பெரியகுளம் அருகே சட்டவிரோதமாக 13 கிலோ கஞ்சா வைத்திருந்த பெண் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சட்டவிரோதமாக 13 கிலோ கஞ்சா வைத்திருந்த பெண் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம் பகுதியில் இருவா் கஞ்சா வைத்திருப்பதாக பெரியகுளம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், பெரியகுளம் உதவி ஆய்வாளா் கணேஷ் தலைமையிலான போலீஸாா் எ.புதுப்பட்டி பிரிவு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அந்த வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். இதில், பழனி அருகேயுள்ள பாலாறு அணை வடக்குத் தெருவைச் சோ்ந்த சீத்தாராமன் (61), இதே பகுதியைச் சோ்ந்த மனோகரன் மனைவி முத்து (51) ஆகியோா் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த 13.40 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

33 ஆண்டுகளுக்குப் பிறகு! அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு டிரம்ப் உத்தரவு?

நடிகர் ஆமிர் கானுக்கு பிரபல கார்ட்டூனிஸ்ட் ‘ஆர்.கே. லக்‌ஷ்மணன்’ விருது!

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

SCROLL FOR NEXT