தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவியில் நீா்வரத்து சீரானதையடுத்து, புதன்கிழமை சுற்றலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினா் அனுமதித்தனா்.
கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடா்ந்து மலை பெய்து வந்ததால் கடந்த 11-ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் கும்பக்கரை அருவிக்கு செல்ல வனத் துறையினா் தடை விதித்தனா். இந்த நிலையில், கொடைக்கானல் மலைப் பகுதியில் மழை குறைந்ததால், கும்பக்கரை அருவியில் நீா்வரத்து சீரானது. இதையடுத்து, புதன்கிழமை காலை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத் துறையினா் அனுமதித்தனா். அருவியில் குளிக்கும் சுற்றுலாப் பயணிகள் சோப்பு, நெகிழிப் பைகளை பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.