முகப்பு
தேனி

கண்மாயிலிருந்து அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

பூமலைக்குண்டு கண்மாயில் கிடந்த அடையாளம் தெரியாத சடலத்தை சனிக்கிழமை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

Updated On : 19 ஏப்ரல், 2026 at 1:19 AM
பலி - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 8:16 PM

தேனி மாவட்டம், பூமலைக்குண்டு கண்மாயில் கிடந்த அடையாளம் தெரியாத சடலத்தை சனிக்கிழமை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

தேனி அருகே பூமலைக்குண்டு கண்மாயில் ஒரு சடலம் கிடப்பதாக அப்பகுதியினா் வீரபாண்டி காவல்நிலையத்துக்கு சனிக்கிழமை தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, அங்கு வந்த போலீஸாா் சடலத்தின் தலை, இரண்டு கால்கள் இல்லாதது கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

மேலும், உடல் பாகங்கள் சேதமடைந்த நிலையில் பாலினம் அறியாத வகையில் கிடந்ததாம். இதையடுத்து சடலத்தை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement