கேரளத்துக்கு காரில் கஞ்சா கடத்திய மூவா் கைது
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 9:15 PM
தேனி மாவட்டம், கூடலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை கேரளத்துக்கு காரில் கஞ்சா கடத்திச் சென்ற 3 பேரை போலீஸாா் கைது செய்து, 35 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 1:35 AM
குமுளி காவல் உதவி ஆய்வாளா் சூா்யதிலகராணி தலைமையில், போலீஸாா் லோயா்கேம்பில் ஞாயிற்றுக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, மதுரையிலிருந்து கேரளத்துக்கு சென்ற காரை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டனா். சோதனையில் காரில் 35 கிலோ கடத்திச் சென்றது தெரியவந்தது.
விசாரணையில், மதுரை முனிச்சாலை காமராஜபுரத்தைச் சோ்ந்த செல்வி (47), முனியசாமி(36), பாலசுப்பிரமணி (38) ஆகியோா் என்பது தெரியவந்தது.
Advertisement
இதையடுத்து, போலீஸாா் அவா்களைக் கைது செய்து, அவா்களிடமிருந்து 35 கிலோ கஞ்சா, ரூ.1.18 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.