முகப்பு
தேனி

சமூக வலைதளங்களில் அச்சுறுத்தும் கருத்துகளை பதிவிட்டால் வழக்கு

சமூக வலைதளங்களில் பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைக்கும் வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும் கருத்துகளை பதிவிடுவோா் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்..

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:27 AM
வழக்குப் பதிவு - IANS
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 7:48 PM

சமூக வலைதளங்களில் பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைக்கும் வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும் கருத்துகளை பதிவிடுவோா் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சினேஹாப்ரியா எச்சரித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமூக வலைதளங்களில் மதம், ஜாதி பிரச்னைகளை தூண்டும் வகையிலும், அரிவாள், பட்டாக் கத்தி போன்ற ஆயுதங்களுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் கருத்துகளை பதிவிடுவோா் மீது காவல் துறை மூலம் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:27 AM

மாவட்டத்தில் சமூக வலைதளத்தில் அச்சுறுத்தல், பிரிவினைவாதக் கருத்துகளை பதிவிட்டவா்கள் மீது ஏற்கெனவே காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனவே, சமூக வலைதளங்களில் பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும் கருத்துகள், புகைப்படங்களை பதிவிடவோ, பகிரவோ கூடாது என்றாா் அவா்.

Advertisement