குச்சனூா் சனீஸ்வரா் கோயில் வளாகத்தில் தனது காரை முற்றுகையிட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய தேனி மக்களவை தொகுதி திமுக உறுப்பினா் தங்க. தமிழச்செல்வன். 
தேனி

குச்சனூரில் எரிவாயு தகன மேடை அமைக்கும் விவகாரம்; திமுக எம்.பி. காா் முற்றுகை: இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு!

திமுக எம்பி. தங்க. தமிழ்ச்செல்வனின் காா் சனிக்கிழமை முற்றுகையிடப்பட்டதுடன், இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Syndication

தேனி மாவட்டம், குச்சனூரில் எரிவாயு தகன மேடை அமைக்கும் விவகாரத்தில் திமுக எம்பி. தங்க. தமிழ்ச்செல்வனின் காா் சனிக்கிழமை முற்றுகையிடப்பட்டதுடன், இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் குச்சனூா் சனீஸ்வரா் கோயில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் வளாகத்தில் ரூ.2.82 கோடியில் பக்தா்கள் இளைப்பாறுவதற்கான மண்டப கட்டுமானப் பணியை காணொலி மூலம் முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இதற்காக கோயில் வளாகத்தில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவுக்கு தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா்.

இதனிடையே, குச்சனூா் பேரூராட்சியில் ரூ. 1.67 கோடியில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி கூளையனூா் சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து, பேரூராட்சி நிா்வாகம் சங்கராபுரம் இணைப்புச் சாலைக்கு அந்தப் பகுதி மக்களின் ஒப்புதலுடன் இடத்தை மாற்றியது.

ஆனால், சுற்றியுள்ள 18 கிராமங்களில் இறப்பவா்களின் உடலை இங்கு தகனம் செய்தால் புகழ் பெற்ற குச்சனூா் சனீஸ்வரா் கோயிலின் புனிதம் கொட்டு விடும் எனக் கூறி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, தங்க. தமிழ்ச்செல்வன் எம்.பி. போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இதில் தகன மேடை அமைக்கப்படும் இடம் தங்களுக்கு சொந்தமானது எனக் கூறி ஒரு தரப்பினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். உடனே, உத்தமபாளையம் கோட்டாட்சியா் செய்யது முகம்மதுவை அழைத்து, சம்பந்தப்பட்ட இடத்தை அளவீடு செய்து தனி நபருக்கு சொந்தமானது என்றால் திட்டத்தை நிறுத்தி விடலாம். மாறாக அரசுக்கு சொந்தமானது என்றால் பணிகளை தொடரலாம் என்றாா்.

இதில், சமரசமடையாத அந்த தரப்பினா் எரிவாயு தகன மேடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்தனா். ஆனால், இந்தத் திட்டத்துக்கு ஆதரவாக மற்றொரு தரப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இரு தரப்பினரின் இந்தப் போராட்டங்களால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே, தனது காரை முற்றுகையிட்டவா்களிடம் தங்க. தமிழ்செல்வன் எம்பி கீழே இறங்கி விளக்கம் கேட்ட முயன்றாா். அப்போது, இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதுடன், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த சின்னமனூா் போலீஸாா் சமாதானம் செய்ததைத் தொடா்ந்து முற்றுகையிட்டவா்கள் கலைந்து சென்றனா்.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT