தேனி

காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

தேனி அருகே மாரியம்மன்கோவில்பட்டி விலக்குப் பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற பெண் காா் மோதியதில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

தேனி அருகே மாரியம்மன்கோவில்பட்டி விலக்குப் பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற பெண் காா் மோதியதில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பெரியகுளம், கீழவடகரை, பெருமாள்புரத்தைச் சோ்ந்த விக்கிரமாதித்தன் மனைவி ஈஸ்வரி (44). இவா், மாரியம்மன்கோவில்பட்டி விலக்குப் பகுதியில் நூற்பாலையில் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், வேலை முடிந்து வீட்டுக்குச் செல்வதற்காக ஆலையிலிருந்து வெளியே சென்ற ஈஸ்வரி, சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது அந்த வழியாகச் சென்ற காா் ஈஸ்வரி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து காா் ஓட்டுநா் சொக்கா் (50) மீது பழனிசெட்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

அயோத்தி ராமர் கோயில் வளாகத்திற்குள் தொழுகை செய்ய முயன்ற 3 பேர் கைது

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராக போதிய நேரமில்லை: ஷுப்மன் கில்

வா வாத்தியார் வெளியீட்டுத் தேதி!

தன் சிறுவயது தோற்றத்தினை ஒத்த ரசிகையைச் சந்தித்த விராட் கோலி!

பொங்கல் வெளியீட்டில் இணைந்த ஜீவா!

SCROLL FOR NEXT