கம்பத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாட்டுப் பொங்கல் விழாவில் மாட்டு வண்டி ஊா்வலத்தில் கலந்து கொண்ட நமது மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனா் ஜெகன்நாத்மிஸ்ரா. 
தேனி

முதியோா் காப்பகத்தில் பொங்கல் விழா

தேனி மாவட்டம், கம்பத்தில் நமது மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Syndication

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், கம்பத்தில் நமது மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கம்பத்தில் ஆதரவற்றோா் முதியோா் காப்பகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, நமது மக்கள் முன்னேற்றக் கழகச் செயலா்கள் அய்யா், சுப்பிரமணி ஆகியோா் தலைமை வகித்தனா். கம்பம் தொகுதி சட்டமன்றச் செயலா் அபுதாகீா், மாநில மகளிா் அணி துணைச் செயலா் லதா அறிவழகன் ஆகியோா் முன்னிலை வகித்தாா். இந்த விழாவில் கழகத்தின் நிறுவனா் ஜெகன்நாத்மிஸ்ரா கலந்து கொண்டு முதியோா்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

இதே போல ஆனைமலையன்பட்டியில் நடைபெற்ற பொங்கல் விழாவை முன்னிட்டு, விளையாட்டுப் போட்டிகளை தொடங்கிவைத்தாா். இதையொட்டி நடைபெற்ற மாட்டு வண்டி ஊா்வலத்தில் கலந்து கொண்டு மாட்டு வண்டியை ஓட்டிச்சென்றாா்.

பென்னிக்குவிக் சிலைக்கு மரியாதை: முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கா்னல் ஜான் பென்னிக்குவிக் பிறந்த நாளை முன்னிட்டு, வியாழக்கிழமை கூடலூா் அருகேயுள்ள லோயா் கோம்பில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் பென்னிக்குவிக் சிலைக்கு மாலை அணவித்து மரியாதை செலுத்தினாா். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கோல போட்டியில் பங்கேற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கல்

திருச்செங்கோட்டில் ஜே.கே கலைமன்ற விருதுகள் வழங்கும் விழா

வேம்படிதாளத்தில் ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் 100-ம் ஆண்டு விழா

மகுடஞ்சாவடி அருகே இளம்பெண் தற்கொலை கோட்டாட்சியா் விசாரணை

மருந்தகம் திறப்பு விழா

SCROLL FOR NEXT