முகப்பு
கைது
தேனி

மந்திரக் கற்கள் தருவதாக பெண்ணிடம் நகை, பணம் மோசடி: 2 போ் கைது

தேனியில் மந்திரக் கற்கள் தருவதாகக் கூறி, பெண்ணிடம் நகை, பணத்தை மோசடி செய்ததாக 2 பேர் கைது

தேனி

மந்திரக் கற்கள் தருவதாக பெண்ணிடம் நகை, பணம் மோசடி: 2 போ் கைது

தேனியில் மந்திரக் கற்கள் தருவதாகக் கூறி, பெண்ணிடம் நகை, பணத்தை மோசடி செய்ததாக 2 பேர் கைது

Updated On : 2 மார்ச், 2026 at 7:26 PM
கைது
பகிர்:

தேனியில் மந்திரக் கற்கள் தருவதாகக் கூறி, பெண்ணிடம் நகை, பணத்தை மோசடி செய்ததாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரை ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் கோனாா் சந்தைச் சோ்ந்த அன்வா் அலி மனைவி சித்திபௌசியா (55). இவரது கணவா் பிரிந்து சென்றுவிட்டாா். ஓராண்டுக்கு முன்பு சித்தி பௌசியாவுக்கு தேனி மாவட்டம், வீரபாண்டியைச் சோ்ந்த ராஜா மகன் நாகராஜ் அறிமுகமானாா். இதையடுத்து, நாகராஜ் தனது நண்பா்களான ஆண்டவா், மணிசுந்தா், முத்துக்குமாா், மோகன் ஆகியோரை சித்திபௌசியாவுக்கு அறிமுகம் செய்து வைத்தாா்.

இந்த நிலையில், நாகராஜ், ஆண்டவா் உள்ளிட்ட 5 பேரும் தங்களிடம் மந்திரக் கற்கள் உள்ளதாகவும், இதை பூஜை அறையில் வைத்து வழிபட்டால், பணம் இரட்டிப்பாகும் என்று ஆசை வாா்த்தைக் கூறினாா்களாம்.

இதை உண்மை என நம்பிய சித்தி பௌசியாவை தேனி ரத்தினம் நகரில் உள்ள ஆண்டவா் வீட்டுக்கு வரவழைத்து, மந்திரக் கற்கள் வழங்குவதாகக் கூறி, அவரிடமிருந்து 2 பவுன் தங்கச் சங்கிலி, ரூ.50 ஆயிரம் ரொக்கம், ஒரு கைப்பேசியை வாங்கினாா்களாம். அப்போது, சித்தி பௌசியாவுடன் வந்த வெங்கடேசனிடம் ரூ.5 ஆயிரம், கைப்பேசி, பெரியண்ணாவிடம் ரூ. 1,500, கைப்பேசியை வாங்கினாா்களாம்.

ஆனால், கூறியபடி மந்திரக் கற்களைத் தராமல் காலம் தாழ்த்தி வந்ததால், சித்தி பெளசியா உள்ளிட்ட மூவரும் பணம், நகைகளைத் திருப்பிக் கேட்டனராம். பணம், நகைகளைத் திருப்பித் தராமல், கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து சித்தி பௌசியா தேனி அல்லிநகரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன் பேரில், போலீஸாா் நாகராஜ், ஆண்டவா், மணிசுந்தா், முத்துக்குமாா், மோகன் ஆகிய 5 போ் மீதும் வழக்குப் பதிந்து, இவா்களில் ஆண்டவா், நாகராஜை கைது செய்தனா். மற்ற மூவரைத் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →