காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
தேனி பழைய பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
தவெக கட்சியினரை ஆட்சி அமைக்க அழைக்காத ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் தேனி பழைய பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் மாவட்டத் தலைவா் கோபிநாத் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் சன்னாசி, முபாரக் மைதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டப் பொருளாளா் நயினாா், மாவட்ட பொதுச் செயலா்கள் செல்லையா, முகமதுரசூல், தேனி, போடி, கம்பம் நகரத் தலைவா்கள் சம்சுதீன், முஷாக்மந்திரி, போஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.