விருதுநகர்

காரியாபட்டியில் சமுதாய மேம்பாட்டு பயிற்சி முகாம்

இந்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நேரு யுவகேந்திரா சார்பில் சமுதாய மேம்பாட்டு பயிற்சி முகாம் 3 நாள்கள் காரியாபட்டியில் நடைபெற்றது.

கல்யாணி வெங்கடராமன்

இந்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நேரு யுவகேந்திரா சார்பில் சமுதாய மேம்பாட்டு பயிற்சி முகாம் 3 நாள்கள் காரியாபட்டியில் நடைபெற்றது.

  முதல் நாள் முகாமில் இளைஞர் மன்றங்கள் மற்றும் கிராம வளர்ச்சி பற்றி இளைஞர் ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் ஜேம்ஸ் பேசினார். சமூக நலனில் இளைஞர்களின் பங்கு பற்றி எஸ்.பி.எம். அறக்கட்டளை நிறுவனர் அழகர்சாமி, அடிப்படை சட்டம் பற்றி வழக்குரைஞர் திருநாவுக்கரசு, தலைமைத்துவ பண்பு குறித்து பூங்குமரன், நோய் தடுப்பு குறித்து சுகாதார ஆய்வாளர் ஜெயராமன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். 2ஆம் நாள் முகாமில் அரசு நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லுதல் பற்றி யூனியன் ஆணையாளர் கதிரேசன், இளைஞர்களின் ஆரோக்கிய வாழ்வில் சித்த மருத்துவம் குறித்து அரசு சித்த மருத்துவர் பரிமளசெல்வன் ஆகியோர் பேசினர். 3ஆம் நாள் முகாமில் வாழ்க்கை கல்வி, பாரம்பரிய மூலிகை பயன்பாடு ஆகியவை பற்றி கருத்துரை வழங்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை காரியாபட்டி வட்டார தேசிய சேவை தொண்டர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT