மல்லி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்
பள்ளி வயது குழந்தைகள் அனைவரும் கட்டாய கல்வி பயில பள்ளிக்கு அனுப்ப வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகள் இடைநிற்றல் இன்றி உயர்கல்விக்கு செல்ல வேண்டும். ஆதரவற்ற பள்ளி வயது குழந்தைகளை உண்டு உறைவிடப்பள்ளியில் சேர்க்க முன் வர வேண்டும். அரசின் கல்வி சலுகைகள் அனைத்தையும் மாணவர்கள் பெற்று
விருதுநகர்மல்லி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்
பள்ளி வயது குழந்தைகள் அனைவரும் கட்டாய கல்வி பயில பள்ளிக்கு அனுப்ப வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகள் இடைநிற்றல் இன்றி உயர்கல்விக்கு செல்ல வேண்டும். ஆதரவற்ற பள்ளி வயது குழந்தைகளை உண்டு உறைவிடப்பள்ளியில் சேர்க்க முன் வர வேண்டும். அரசின் கல்வி சலுகைகள் அனைத்தையும் மாணவர்கள் பெற்று
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மல்லி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராமசுப்பு தலைமையில் நடைபெற்றது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வள மையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மல்லி ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த கூட்டத்தில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் திரு.கி.இராமசுப்பு கலந்து கொண்டு பேசியதாவது:
பள்ளி வயது குழந்தைகள் அனைவரும் கட்டாய கல்வி பயில பள்ளிக்கு அனுப்ப வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகள் இடைநிற்றல் இன்றி உயர்கல்விக்கு செல்ல வேண்டும். ஆதரவற்ற பள்ளி வயது குழந்தைகளை உண்டு உறைவிடப்பள்ளியில் சேர்க்க முன் வர வேண்டும். அரசின் கல்வி சலுகைகள் அனைத்தையும் மாணவர்கள் பெற்று பயனடைய பெற்றோர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். மாற்றுத் திறனுடைய குழந்தைகளை தகுந்த சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.கிராம சபைக் கூட்டங்களில் வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.