காட்டுப் பகுதியில் கருந்திரி தயாரித்த இருவர் கைது
காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக கருந்திரி தயாரித்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக கருந்திரி தயாரித்த இரண்டு பேர் கைது
செய்யப்பட்டனர்.
கோட்டைப்பட்டி, துரைச்சாமிபுரம், மீனாட்சிபுரம் கிராமங்களில் சட்டவிரோதமாக காட்டுப்பகுதியில் கருந்திரி தயாரிப்பதாக வெம்பக்கோட்டை போலீஸாருக்குத் தகவல் வந்தது. அதன் அடிப்படையில் குறிப்பிட்ட கிராமங்களில் காவல் துறையினர் ரோந்து சென்றனர்.
Advertisement
Advertisement
மீனாட்சிபுரம், துரைச்சாமிபுரம் ஆகிய கிராமங்களில் காட்டுப் பகுதியில் செட் அமைத்து பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரி தயாரித்தது தெரியவந்தது. இது தொடர்பாக வெம்பக்கோட்டை போலீஸார் கருந்திரி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கருப்பசாமி (40), பாக்கியராஜ் (40) ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அங்கு தயாரித்து வைத்திருந்த 100 கருந்திரி கட்டுக்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.