விருதுநகர்

'ஜாக்டோ-ஜியோ' வேலை நிறுத்தத்தில் மருந்தாளுநர்கள் பங்கேற்க முடிவு

DIN

விருதுநகரில், தமிழ்நாடு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாநிலத் தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். இதில், மாநிலப் பொதுச் செயலர் பால்முருகன் கலந்துகொண்டு பேசுகையில், ஊதிய மாற்றத்தை அமல்படுத்துவதற்காகவும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய ஜாக்டோ-ஜியோ பேரவை ஆகஸ்ட் 22 இல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துகிறது. அதில், மருந்தாளுனர்கள் சங்கம் பங்கேற்கும். மேலும், செப்டம்பர் 7 முதல் நடைபெற உள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் அனைவரும் முழுமையாகப் பங்கேற்க வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில், 33 மாவட்டங்களிலிருந்து 75 பெண் மருந்தாளுநர்கள் உள்பட சுமார் 250 பேர் பங்கேற்றனர். முன்னதாக, மாவட்டத் தலைவர் ராஜகுரு வரவேற்றார்.
முடிவில், மாநிலச் செயலர் விஜயகுமரன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணம் ஆயிரம் - பிரபல டிவியின் புதிய தொடர்!

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

மே 5-க்குள் கியூட்-யுஜி தேர்வு மைய அறிவிப்பு வெளியாகும்: யுஜிசி தலைவர்

மேற்கு வங்கம்: கோஷ்டி மோதலில் திரிணமூல் காங். தொண்டர் பலி, பாஜக பெண் தலைவர் காயம்

SCROLL FOR NEXT