விருதுநகர்

அடிப்படை வசதிகள் இல்லாத அரசு தொழிற்பயிற்சி மையம்

DIN

சாத்தூரில்  அரசு தொழிற்பயிற்சி மையத்துக்கு அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தூரில் கடந்த ஆட்சியில் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது.  தாற்காலிகமாக சாத்தூர் காமராஜபுரத்தில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக வாடகை கட்டடத்தில் வகுப்புகள் இயங்கி வருகிறது.அரசு தொழிற்பயிற்சி நிலையம் என்பதால் சாத்தூர் பகுதியை சுற்றியுள்ள ஏராளமான மாணவ,மாணவிகள் ஆர்முடன் இதில் சேர்ந்து பயிற்சி பெற்று வருகின்றனர். ஆனால் இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில்  கழிப்பட வசதி, குடிநீர் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை.
இதுகுறித்து தொழிற்பயிற்சி நிலைய பயிற்றுநர்கள் கூறுகையில்,  பயிற்சிநிலையத்திற்கான ஆவணங்களை கூட பாதுகாப்பாக வைக்க முடியவில்லை. தொழிற்பயிற்சி நிலைய புதிய கட்டடத்துக்கு இடத் தேர்வு நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறி வருகின்றனர். இருப்பினும் பணிகள் தாமதமாகி வருகிறது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

SCROLL FOR NEXT