விருதுநகர்

ஆய்வு கட்டுரைப் போட்டி: கலசலிங்கம் கல்லூரி முதலிடம்

DIN

சிவகாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கட்டுரை சமர்பிக்கும் போட்டியில் கலசலிங்கம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி முதலிடம் பெற்றது.
பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் மின்னியல் மற்றும் தொலைத் தொடர்பியல், கணிப்பொறியியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல்துறை ஆகியவற்றின் சார்பில் இப்போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.இதில் துறை சார்ந்த ஆய்வுக்கட்டுரை சமர்பித்தல், பேச்சுத்திறமை வளர்த்தல் போட்டி, விநாடி-வினா போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியை கல்லூரி முதல்வர் கே.சுப்பிரமணியன் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். போட்டியில் அதிகப்புள்ளிகளைப் பொற்று கலசலிங்கம் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி முதலிடம் பெற்றது. அருப்புக்கோட்டை சேது பொறியியல் கல்லூரி இரண்டாமிடம் பெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரித் தாளாளர் ஆர்.சோலைச்சாமி பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் டீன் பி.மாரிச்சாமி மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT