விருதுநகர்

பந்தல்குடியில் கன மழை விவசாயிகள் மகிழ்ச்சி

DIN

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா பந்தல்குடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில வாரங்களாக கடும் கோடைவெயில் வாட்டி வதைத்து வந்தது.
  இந்நிலையில் திங்கள்கிழமை மாலை சுமார்  4 மணிக்கு கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது.அதிக காற்று மற்றும் இடி மின்னலுடன் தொடர்ந்து சுமார் 40 நிமிடங்கள்வரை கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் முழங்கால் அளவு தேங்கிய மழை நீரில் சிரமத்துடன் பேருந்து நிறுத்தத்திற்கு வந்ததைக் காணமுடிந்தது. இதனால் கோடையின் வெப்பம் தணிந்து பந்தல்குடியிலும் அதன் சுற்றுப்புற கிராமங்களிலும் இதமான குளிர்ந்த தட்பவெப்பம் நிலவியது. 
  அருப்புக்கோட்டை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை சுமார் 5 மணிக்கு மழை பெய்யத்தொடங்கியது. நகர்ப்பகுதியில் சிறுதூறலும், புறநகர்ப் பகுதிகளில் மிதமான மழையும் சுமார் 20 நிமிடங்கள்வரை பெய்தது. 
 சிறிது நேரமே மழை பெய்தபோதும் கோடைவெப்பம் தணிந்து இதமான குளிர்ந்த தட்பவெப்பம் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

வாரணம் ஆயிரம் - பிரபல டிவியின் புதிய தொடர்!

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

SCROLL FOR NEXT