முகப்பு
விருதுநகர்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் சிக்கி, மதுரை அரசு மருத்துவமனையில்  மூளைச்சாவு அடைந்த விருதுநகரைச் சேர்ந்த இளைஞரின் உடல் உறுப்புகள் வியாழக்கிழமை தானமாக பெறப்பட்டு, நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டன.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:19 PM
பகிர்:

சாலை விபத்தில் சிக்கி, மதுரை அரசு மருத்துவமனையில்  மூளைச்சாவு அடைந்த விருதுநகரைச் சேர்ந்த இளைஞரின் உடல் உறுப்புகள் வியாழக்கிழமை தானமாக பெறப்பட்டு, நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டன.
    விருதுநகர் மாவட்டம், சாமிநத்தம் கிருஷ்ணபேரியைச் சேர்ந்த முனியாண்டி மகன் முத்துராஜன் (28). லாரி ஓட்டுநராகப் 
பணிபுரிந்து வந்த முத்துராஜன், தனது உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு பிப்ரவரி 18-ஆம் தேதி சென்ற போது, விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். 
விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு,  மேல் சிகிச்சைக்காக மதுரை சுற்றுச்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பின்னர், அங்கிருந்து அரசு மருத்துவமனைக்கு பிப்ரவரி 19-ஆம் தேதி கொண்டு வரப்பட்டார். 
ஆனால்,  அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட நிலையில், பிப்ரவரி 21-ஆம் தேதி அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
    அதையடுத்து, உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ் மூலம், முத்துராஜனின் மனைவி விமலாதேவியிடம் உறுப்பு தானம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. பின்னர், அவரது அனுமதியின்பேரில் உடல் உறுப்பு தானத்துக்கான ஏற்பாடுகள் தொடங்கின.
    மேலும், மருத்துவமனை டீன் மருது
பாண்டியன் உத்தரவின்பேரில், காவல்துறை, மருத்துவக் கல்லூரி 
தடயவியல் துறை ஆகியவற்றிலும் தடையில்லாச் சான்று பெறப்பட்டது. 
தொடர்ந்து, இருதயவியல் அறுவைச் சிகிச்சை துறைத் தலைவர் ரத்தினவேல், சிறுநீரக அறுவைச் சிகிச்சை துறைத் தலைவர் சந்திரசேகர், சிறுநீரகவியல் துறைத் தலைவர் அருள், மயக்கவியல் துறை இயக்குநர் ஈவ்லின் ஆசிர்வாதம் மற்றும் மருத்துவர்கள் அடங்கிய குழுவினர், உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் ஈடுபட்டனர்.
    இதில், முத்துராஜனின் இருதயம் மற்றும் ஒரு சிறுநீரகம் மதுரை அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கும், நுரையீரல் சென்னை தனியார் மருத்துவமனைக்கும், கல்லீரல் திருச்சி தனியார் மருத்துவமனைக்கும், தோல் கோவை தனியார் மருத்துவமனைக்கும், இரு கண்கள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டு, பிற நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டன.
    மதுரை அரசு மருத்துவமனையில் இரண்டாவது முறையாக இருதய மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →