விருதுநகர்

அருப்புக்கோட்டை கணேஷ் நகரில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

DIN

அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உள்பட்ட புறநகர்ப் பகுதியான கணஷ் நகரில் வாய்கால் வசதி, கூடுதல் தெருமின்விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அருப்புக்கோட்டை கணேஷ் நகர் பகுதியில் ஆரம்பம் முதலே வாய்கால் வசதி இல்லாததால் பொதுமக்கள் அவரவர் வீட்டு முன் ஆழமான குழிகளைத் தோண்டி வீட்டிலிருந்து வெளியேறும் கழிவுநீரை அதில் விட்டு வந்தனர். இருந்தபோதும் அதிக எண்ணிக்கையில் குடும்ப உறுப்பினர்கள் கொண்ட வீடுகளில் இவ்விதம் தோண்டப்பட்ட குழிகள் நிரம்பி வீதியில் கழிவுநீர் வழிந்தோடி பள்ளங்களில் தேங்குகிறது.
இப்படித் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடான சூழல் ஏற்படுவதுடன், கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி இப்பகுதி வீடுகளில் கொசுத்தொல்லை அதிகமாகி விடுகிறது. இதுதவிர ஆரம்பத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்நகரில் குறைவாக வீடுகள் இருந்தபோது மின்கம்பங்கள் அமைக்கப்பட்டன. அதன்பின்னர் இந்நகரில் தற்போது எல்லா காலிஇடங்களிலும் வீடுகள் கட்டப்பட்டுவிட்டன. 
ஆனால் போதிய புதிய தெருமின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இவ்விதம் இந்நகருக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்ததர பொதுமக்கள் பலமுறை நகர் மன்றத் தலைவர், நகராட்சிஆணையர் உள்ளிட்டோரிடம் கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் உரிய நடவடிக்கை இல்லையென அவர்கள் வருந்துகின்றனர்.எனவே கணேஷ் நகரில்  அடிப்படை வசதிகள் செய்துதர அப்பகுதி பொதுமக்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

கனமழை எதிரொலி: கென்யாவில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை!

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு

SCROLL FOR NEXT