விருதுநகர்

விருதுநகரில் குடிநீர் தொட்டியில் குப்பைகளுடன் மழைநீர் தேங்குவதால் நோய் பரவும் அபாயம்

DIN

விருதுநகர் அகமது நகரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வளாகத்தில் உள்ள குடிநீர் வால்வு தொட்டியில் மழைநீர் மற்றும் குப்பைகள் தேங்கி டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த மேல்நிலை நீர்த் தேக்கத்  தொட்டி வளாகத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியும், புதிதாகக் கட்டப்பட்டுள்ள 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டியும் உள்ளன. இந்த நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து குடிநீர் திறந்து விடுவதற்காக சுமார் 4 அடி ஆழத்தில் வால்வு தொட்டி கட்டப்பட்டுள்ளது. திறந்தநிலையில் உள்ள இத்தொட்டியில், மழைநீர் மற்றும் தென்னை மட்டைகள், குப்பைகள் தேங்கியுள்ளன. 
இதில், உருவாகும் புழுக்களால் டெங்கு காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது என பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். தற்போது, டெங்கு, பன்றிக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், நகராட்சி அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்து, பொதுமக்களை எச்சரிக்கை செய்கின்றனர். ஆனால், அவர்களது கண்காணிப்பில் உள்ள பகுதியில் குப்பைகளுடன் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால்  காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக, பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, விருதுநகர் நகராட்சிக்குச் சொந்தமான அலுவலகங்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வளாகங்களை, மாவட்ட ஆட்சியர் நேரடி ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT