விருதுநகர்

அருப்புக்கோட்டையில் போலீஸார் கொடி அணிவகுப்பு

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள்அச்சமின்றி

DIN

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள்அச்சமின்றி வாக்களிக்கவும், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் போலீஸாரின் கொடி அணிவகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதற்கு விருதுநகர் கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளர் அஸ்லாம், அருப்புக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் தலைமை வகித்தனர். நகர் காவல் ஆய்வாளர் பாலமுருகன், தாலுகா காவல் ஆய்வாளர் அன்னராசா, போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த அணிவகுப்பு புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி, பெரியார் சிலை, அமுதலிங்கேஸ்பரர் கோயில், அண்ணாசிலை, அகமுடையார் மகால், திருச்சுழி சாலை வழியாக காந்தி நகர் வரை சென்று நிறைவடைந்தது.
இதில் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி  தேசிய மாணவர் படை யினர் அணிவகுப்பு வாத்தியம் இசைத்தனர். சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

SCROLL FOR NEXT