விருதுநகர்

வெம்பக்கோட்டையில் அமமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதிக்கு உள்பட்ட வெம்பக்கோட்டையில் அமமுக  தேர்தல் பணிக்குழு

DIN

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதிக்கு உள்பட்ட வெம்பக்கோட்டையில் அமமுக  தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம் மற்றும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.  
 தனியார் அரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமமுக சார்பில் சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.ஜி.சுப்பிரமணியன் மற்றும் விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பரமசிவம் ஐயப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக தேர்தல் மண்டல பொறுப்பாளர் மற்றும் கட்சியின் அமைப்புச் செயலாளர் மாணிக்கராஜா வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர், அமமுக வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்தால் தேர்தல் அறிக்கையில் அறிவித்த அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் என்றார். கூட்டத்தில் சாத்தூர் நகரச் செயலாளர் ஜீ.ஆர்.முருகன்,அமைப்பு சாரா ஓட்டுநரணி மாநில துணைச் செயலாளர் இளங்கோவன், மாவட்ட மகளிரணிச் செயலாளர் கவிதா தனசேகரன் உள்ளிட்ட  கட்சியின் நகர, ஒன்றிய நிர்வாகிளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். 
 முன்னதாக வேட்பாளர்கள் இருவரும் வெம்பக்கோட்டை கிராம நுழைவுவாயிலில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வள்ளிமதுரையில் இன்று மக்கள் தொடா்பு திட்ட முகாம்

வீட்டுமனைப் பட்டா வழங்காததை கண்டித்து துண்டுப் பிரசுரம் விநியோகம்

டிச.19-இல் கள்ளக்குறிச்சியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சோமநாதசுவாமி கோயிலில் 1,008 அகல்விளக்கு வழிபாடு

குளத்தில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

SCROLL FOR NEXT