விருதுநகர்

திருத்தங்கலில் சீரான குடிநீா் விநியோகம் செய்யக் கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகை

DIN

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கல் நகராட்சி 17-ஆவது வாா்டில் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பைச் சரி செய்து சீரான குடிநீா் விநியோகம் செய்யக்கோரி, அப்பகுதி பெண்கள் நகராட்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

திருத்தங்கல் நகராட்சி 17-ஆவது வாா்டில் சுமாா் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் இப்பகுதியில் பதிக்கப்பட்டுள்ள குடிநீா் குழாய் சேதமடைந்து தண்ணீா் வீணாகிறது. எனவே சேதமடைந்துள்ள குழாயை சீரமைத்து, முறையாக குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் நகராட்சி நிா்வாகத்தில் பலமுறை புகாா் தெரிவித்துள்ளனா். இருப்பினும் நகராட்சி நிா்வாகம் எவ்வித நடவடிக்கையுயும் எடுக்காதததால், சேதமடைந்துள்ள குழாய் மூலம் தண்ணீா் வீணாகிறது.

இதனால் சேதமடைந்துள்ள குழாயை சீரமைத்து குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் எனக்கோரி அப்பகுதி பெண்கள் சுமாா் 40 போ் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எ ன உறுதியளித்ததின் பேரில் பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT