விருதுநகர்

வெம்பக்கோட்டையில் பேருந்து நிலையம் அமைக்கக் கோரிக்கை

வெம்பக்கோட்டையில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

DIN


வெம்பக்கோட்டையில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா அதிக கிராமங்களை உள்ளடக்கியது. பட்டாசுத் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ள இப்பகுதியில் தொழிலாளர்கள் அருகில் உள்ள சிவகாசி அல்லது  சாத்தூருக்கு செல்ல, தற்போது வரை இப்பகுதியினர் வெம்பக்கோட்டை பிரதான சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் வெயிலிலும், மழையிலும் காத்திருந்து பயணம் செய்து வருகின்றனர். 
மேலும் இந்த பகுதிக்கு வரும் பேருந்துகள் அனைத்தும் பிரதான சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையிலேயே நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றவும், இறக்கவும் செய்கின்றனர். இந்த  பிரச்னைக்கு தீர்வுகான வெம்பக்கோட்டை பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க  வேண்டும் என இப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடமும், தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரிடமும் மனு அளித்தும்  எவ்வித நடவடிக்கையும் இல்லை. 
எனவே பொதுமக்கள் நலன் கருதி  வெம்பக்கோட்டையில் பேருந்துகள் நின்று செல்வதற்கு ஏதுவாக, இருக்கை வசதியுடன் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என  இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய யூடியூப்!

பொறுமையாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ்: ஆஸி. பந்துவீச்சில் அசத்தல்!

களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க முடியாது! அதிமுகவை விமர்சித்த விஜய்!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டிய நாதகவினர் கைது!

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

SCROLL FOR NEXT