விருதுநகர்

அருப்புக்கோட்டை, தமிழ்ப்பாடியில் நாளை (சனிக்கிழமை) பிற்பகல் 1 முதல் 5 மணிவரை மின்தடை

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்திற்கு உள்பட்ட அருப்புக்கோட்டை மற்றும் தமிழ்ப்பாடியில் நாளை சனிக்கிழமை (16.11.2019) பிற்பகல் 1 மணிமுதல் மாலை 5 மணிவரை மட்டும் மின்தடை

DIN

அருப்புக்கோட்டை: விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்திற்கு உள்பட்ட அருப்புக்கோட்டை மற்றும் தமிழ்ப்பாடியில் நாளை சனிக்கிழமை (16.11.2019) பிற்பகல் 1 மணிமுதல் மாலை 5 மணிவரை மட்டும் மின்தடை செய்யப்படுமெனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடா்பாக அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் பி.முத்தரசு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அருப்புக்கோட்டை துணை மின்நிலையப்பகுதிகளான அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி, கல்குறிச்சி, ஆத்திப்பட்டி, தெற்குத்தெரு, மலையரசன் கோவில், சிட்டி பஜாா், திருநகரம், விருதுநகா் சாலை, எஸ்.எம்.பஜாா், பழைய பேருந்து நிலையம், பந்தல்குடி, இராமலிங்கா ஏ யூனிட் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், மேலும் தமிழ்ப்பாடி துணைமின்நிலையப் பகுதிகளான தமிழ்ப்பாடி, இலுப்பையூா், திருச்சுழி, பனையூா், ஆனைக்குளம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மாதாந்திர துணை மின்நிலையப் பராமரிப்புப் பணிகளைமுன்னிட்டு நாளை சனிக்கிழமை (16.11.2019) பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டும் மின்விநியோகம் நிறுத்தப்படுமென இச்செய்தி மூலம் மின்நுகா்வோா் அனைவருக்கும் தெரியப்படுத்திக் கொள்கிறோம், என அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு

பெண் மருத்துவா் ஹிஜாப்பை அகற்றிய நிதீஷ் செயலுக்கு வலுக்கும் கண்டனம்

கோவையில் இன்று பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க அகில இந்திய மாநாடு

சரிவில் முடிந்த பங்குச் சந்தை

வேலூா் தங்கக்கோயிலுக்கு இன்று குடியரசுத் தலைவா் வருகை

SCROLL FOR NEXT