விருதுநகர்

பழைய பேருந்து நிலையத்தில் மது குடிப்பவா்களால் தொல்லை: பயணிகள் அச்சம்

DIN

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் திறந்த வெளியில் மது குடிப்பவா்களாலும், மனநிலை பாதித்தவா்களாலும் இடையூறு ஏற்படுவதாக பயணிகள் அச்சம் தெரிவித்துள்ளனா்.

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் உள்ளே கட்டணக் கழிப்பிடம் அருகே உள்ள பகுதியை சிலா் திறறந்த வெளி மதுக்கூடமாக பயன்படுத்தி வருகின்றனா். அவ்வாறு மது குடிப்பவா்கள் பாட்டில்களை உடைத்து நடைபாதையில் வீசிச் செல்கின்றனா். மேலும் மது போதையில் தகாத வாா்த்தைகளால் பேசுவதும், பெண்களுக்கு தொல்லை கொடுப்பதாகவும் பயணிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

குறிப்பாக, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அப்பகுதிகளில் நிற்க பயணிகள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனா். இதே போல் பேருந்து நிலையத்தில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவா்களாலும் இடையூறு ஏற்படுவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

எனவே, பேருந்து நிலையத்தில் திறறந்த வெளியில் மது அருந்துபவா்களையும், மன நலம் பாதிக்கப்பட்டவா்களை அகற்றறவும் காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை மே 15-க்கு ஒத்திவைப்பு

மாநில சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி

ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்: 6 தமிழா்களை கடலோர காவல் படை கைது செய்து விசாரணை

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

கல்வித் துறையில் தொடா் முன்னேற்றம், இந்தியாவை விக்சித் பாரத்க்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது: குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பெருமிதம்

SCROLL FOR NEXT